பங்குச்சந்தையில் ஐனவரி மாதத்தில் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் சுமார் ரூ5,000 கோடி அளவுக்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர்.அவர்கள் தொடர்ந்து 6 ஆவது மாதமாக முதலீடுகளை அதிகரித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.அதேபோல் கடன் பத்திரஙளில் ரூ30,000 கோடி அளவுக்கு முதலீடு களை மேற்கொண்டுள்ளனர்
ஐனவரி 25ம் தேதி வரையிலும் பங்குச்சந்தையில் மொத்தம் ரூ4,777 கோடி அளவுக்கு மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதாக செபி வெளியிட்டு புள்ளி விவரஙள் இருந்து தெரிய வந்துள்ளது.
டிசம்பரில் ரூ.9,179 கோடி, நவம்பரில் ரூ.13,775 கோடி அக்டோபரில் ரூ.9,129 கோடி ,செப்டம்பரில் ரூ.3,841 கோடி, ஆகஸ்டில் ரூ.2,714 கோடி அளவுக்கு எம் எஃப் நிறுவனன்கள் பங்குச்சந்தையில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு முன்பாக ஜுலையில் எம் எஃப் நிறுவனஙள் ரூ.34,000 கோடி அளவுக்கு பங்குகளை விற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment