உறுதியான லாபம் பெற! நிரந்தர எஸ்.ஐ.பி...
நம்முடைய முதலீடுகளை ஒரே தொகுப்பாக வைத்திருக்காமல் நமது இலக்குகளுக்கேற்ப பிரித்து முதலீடு செய்வதே. அதாவது, பங்குச் சந்தையோடு ஒன்றிணைந்த முதலீட்டுத் திட்டங்களான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் நம்முடைய போர்ட்ஃபோலியோவில் கட்டாயம் இருக்க வேண்டும். ரெக்கரிங் டெபாசிட் திட்டம் போலவே, மியூச்சுவல் ஃபண்டில் மாதாமாதம் ஒரு தொகையை முதலீடு செய்யும் திட்டம் உள்ளது. அதுதான்எஸ்ஐபி. இதில் மாதம் ரூ.500 முதல் முதலீடு செய்ய முடியும். தவணை முதலீடு என்பதற்கு மாறாக, நல்ல முதலீட்டுத் திட்டமாக எஸ்.ஐ.பி முதலீடு இருக்கிறது.
மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீட்டைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்துடன் அணுகலாம். நாம் எஸ்.ஐ.பி முறையில் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம் என்று ஏற்கெனவே சொன்னோம். என்றாலும், அந்த முதலீட்டின் மகத்துவத்தை அறிந்துகொள்ள மாதமொன்றுக்கு ரூ.10,000-த்தை எஸ்.ஐ.பி மூலம் ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். இதில் கிடைக்கும் லாபமானது கூட்டு வட்டி வளர்ச்சி அடிப்படையில் 12% என எடுத்துக்கொண்டால், அடுத்த 20 வருடங்களில் அந்த முதலீடு ஒரு கோடி ரூபாயாக வளர்ந்திருக்கும், 30 வருடங்களில் ரூ.3.5 கோடியாக மாறும். அதுமட்டுமல்லாமல் தற்போதிருக்கும் வரி விதி முறைகள்படி, இந்த வருமானத்துக்கு வரி விலக்கும் உள்ளது.
எஸ்.ஐ.பி முதலீட்டில் கூடுதலாக ஒரு அம்சம் உள்ளது. அது ‘ஸ்டெப் அப் எஸ்.ஐ.பி அல்லது டாப் அப் எஸ்.ஐ.பி’ என்பது. அதாவது, நிலையான எஸ்.ஐ.பி திட்டத்தில் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒரே தொகையை முதலீடு செய்வதற்குப் பதிலாக நம்முடைய வருமான வளர்ச்சிக்கேற்ப, நமக்கு வேண்டிய சமயத்தில், நம்முடைய எஸ்.ஐ.பி முதலீட்டுத் தொகையை நாம் ஒவ்வொரு வருடமும் அதிகப்படுத்திக் கொள்ளலாம். அதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் உங்களுடைய முதலீட்டுத் தொகையான ரூ.10 ஆயிரத்தில் 10% அளவுக்கு உயர்த்தி முதலீடு செய்தால், அதே 12 சதவிகிதக் கூட்டு வட்டி வருமான அடிப்படையில் 20 ஆண்டுகளில் உங்களுடைய முதலீடு ரூ.1.58 கோடி ஆகவும், 30 ஆண்டுகளில் ரூ.6 கோடியாகவும் வளர்ச்சியடையும். இதுதான் கூட்டு வட்டி வளர்ச்சி என்னும் அதிசயம்.
-nanayamvikatan
Mutual Fund Advisor
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189
No comments:
Post a Comment