Wednesday 9 August 2017

நீண்ட கால முதலீடு (LONG-TERM INVESTMENT)

நீண்ட கால முதலீடு (LONG-TERM INVESTMENT)








நீண்ட கால முதலீடு என்பது ஒரு நிறுவனத்தில் பங்கில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கு மேலாக முதலீடு செய்தால் அவற்றை நாம் நீண்டகால முதலீடு (LONG TERM INVESTMENT) என்கிறோம்.

நாம் முதலீடு செய்யும் நிறுவனம் வளர வளர நம்முடைய முதலீடும் வளரும், அதாவது நிறுவனம் வளர்ந்தால் சந்தையில் அதன் மதிப்பும் (விலை) ஏறும், எனவே முதலீட்டின் மதிப்பு நாளுக்கு நாள் பங்கின் சந்தை விலையைப் பொருத்து மாறுபடும். இவ்வகை முதலீட்டார்கள் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு மேல், ஏன் ஒருசிலர் பத்து வருடம் கூட காத்திருப்பார்கள், இதன்மூலம் அந்த முதலீடு நல்ல லாபத்தை தரும். 

நீண்டகால அடிப்படையில் பங்குகளை வாங்குவதை முதலீடு என்று சொல்கிறோம். ஏனென்றால், அவர்கள் தன்னுடைய பணத்தை அந்த நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்திருக்கிறார் அல்லது அந்த நிறுவனம் செய்யும் தொழிலில் பங்கெடுக்கிறார் என்று பொருள். எந்த ஒரு தொழிலை செய்வதாக இருந்தாலும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்த தொழிலில் இருந்து கிடைக்கும் லாபத்தை நாமும் பார்க்க முடியும்.

No comments:

Post a Comment