Friday 26 January 2018

Mutual Fund Advisor


Mutual Fund Advisor







ஒருவருடைய வயது 32. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். எஸ்.ஐ.பி முறையில் ஐந்துக்கும் மேற்பட்ட ஃபண்டுகளில் மாதம் 25,000 ரூபாய் முதலீடு செய்யலாமென இருக்கிறார் . 18 ஆண்டுகளின் முடிவில் குறைந்தபட்சம் ரூ.4 கோடி கிடைக்க வேண்டும். எப்படிப் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்? 

* ‘மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட காலம் முதலீடு செய்ய எஸ்.ஐ.பி சிறந்ததாக இருக்கும். 

* நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, மாதம் ரூ.25,000 வீதம், 18 ஆண்டுகளுக்குச் செய்யப்படும் முதலீட்டுக்குச் சராசரியாக ஆண்டுக்கு 13% வருமானம் கிடைத்தால், முதலீடு ரூ.2,15,80,706-ஆகப் பெருகியிருக்கும். 

* கடந்த காலத்தில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முதலீடு 18% வரை வருமானம் கொடுத்திருக்கிறது என்றாலும், நீங்கள் ஓரளவு சராசரியான எதிர்பார்ப்பை வைத்துக்கொள்வதே நல்லது.

* எனவே, ரூ.4 கோடி என்ற இலக்கை ஏற்கெனவே கூறிய 13% வருமானத்தில் எட்ட வேண்டுமெனில், முதலீட்டு ஆண்டுகளை மேலும் 4.5 ஆண்டுகள் அதிகரித்தால் சுமார் ரூ.4,04,56,800 கிடைக்கக்கூடும். 

* அல்லது அதே 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.47,000 முதலீடு செய்துவந்தால், 13% வருமானத்தில் ரூ.4 கோடி ரூபாய் இலக்கை எட்ட முடியும்.

-nanayamvikatan

Mutual Fund Advisor
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189


No comments:

Post a Comment