Share Market In Karur
ரேஷியோ அனாலிசிஸ்
விகிதாசார ஆய்வு ( ரேஷியோ அனாலிசிஸ் ) என்பது பைனான்ஷியல் உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் கருவி.
நிதி முதலீட்டுக்கு மட்டுமல்ல, உங்கள் தினசரி வாழ்க்கை மற்றும் தொழிலுக்கும் இது மிகவும் பயன்படும்.
உங்களது சம்பளம் மாதம் 20,000 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் விகிதாசார அடிப்படையில் உங்கள் சேமிப்பு 30% (6,000/20,000) ஆகும். உங்கள் சேமிப்பை , உங்களின் வருமானத்துடன் ஒப்பிடுகிறோம்.
ஆனால், அதே சம்பளம் உள்ள உங்கள் நண்பரோ மாதம் 8,000 ரூபாய் வரை சேமிக்கிறேன் என்று கூறுகிறார். அப்படி என்றால் அவரின் சேமிப்பு மாத வருமானத்தில் 40%(8, 000/20, 000).
இப்போது நீங்கள் இந்த சதவிகிதத்தை வைத்து உங்களின் செலவினங்களை உங்கள் நண்பரோடு ஒப்பிடுகிறீர்கள். எல்லாவற்றையும் கணக்கு பார்த்ததில், உங்களால் இன்னும் ஒரு ஆயிரம் ரூபாய் சேமிப்பைக் கூட்ட முடியும் என்று முடிவு செய்கிறீர்கள்.
ஆக உங்களின் சேமிப்பு இனி வருங்காலத்தில் 35% ( 7,000 / 20,000) ஆகிவிடும். இந்த ரேஷியோ அனாலிசிஸ் செய்ததில் உங்களை நீங்கள் மேம்படுத்தி கொள்கிறீர்கள் .
நீங்கள் வாங்கப் போகும் பங்கின் வெவ்வேறு விகிதங்களை அதன் போட்டி நிறுவனங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, நீங்கள் வாங்கப் போகும் நிறுவனம் எந்த அளவு திறமையாகச் செயல்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம்.
நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்
For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189