Tuesday, 3 July 2018

Share Broker In Dindigul

Share Broker In Dindigul




எப்படியெல்லாம் மதிப்பீட்டு செய்யலாம்?

1.பி / இ மடங்கு முறை

பங்கின் சந்தை விலையை பங்கின் வருமானத்தால் வகுத்தால் கிடைப்பதுதான் பி / இ ஆகும். நீங்கள் வாங்கப் போகும் பங்கின் பி / இ- யை அத்துறையில் உள்ள மற்றுமொரு பங்குடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பங்கின் விலை அதிகமாக உள்ளதா அல்லது குறைவாக உள்ளதா என்பது தெரியவரும்.

ஆனால், நீங்கள் ஒப்பிடப்போகும் நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுப்பதை பியர் குரூப் (peer group) உண்டு பண்ணுவது என்று கூறுவார்கள்.

2.புத்தக மதிப்பீட்டு முறை மூலம் மதிப்பிடுதல்

பங்கின் புத்தக மதிப்பை சரியாக கணக்கிட்டு அதன் மூலம் நிறுவனத்தின்/ பங்கின் மதிப்பைக் கண்டறிவதுதான் புத்தக மதிப்பீட்டுமுறை ஆகும்.
புத்தக மதிப்பை வைத்துக் கணக்கிடுவது எல்லாத் தொழில்களுக்கும் பொருந்தாது.
ஒவ்வொரு மதிப்பீட்டு முறையும் ஒவ்வொரு விதமான தொழில்களுக்கு உகர்ந்தது. சேவைப் பொருளாதார நிறுவனங்களுக்கு (சர்வீஸ் இண்டஸ்ட்ரீஸ்) புத்தக மதிப்பீட்டு முறை ஒத்துவராது. கேப்பிட்டல் இன்டென்ஸிவ் என்று சொல்லக்கூடிய அதிகமாக மூலதனம் தேவைப்படும் தொழில்களை (ஷிப்பிங், மின்சாரம் தயாரிப்பு, வங்கி மற்றும் ஃபைனான்ஸ் துறை) புத்தக மதிப்பை வைத்து கணக்கிடலாம்.

3.சந்தை மதிப்பு மூலம் மதிப்பிடுதல் 

சந்தையில் மக்கள் வாங்க/விற்க ரெடியாக இருக்கும் விலையை வைத்து கணக்ககிடுவதுதான் இந்த முறை.இந்த முறையில் சாதகமும் உள்ளது.

சந்தை விலை பலவற்றை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது அவற்றில் முக்கியமான ஒன்று டிமாண்ட் மற்றும் சப்ளை. சந்தை உச்சத்தில் செல்வது பிறகு பாதாளத்திற்கு வருவதும் சகஜமான ஒன்று. ஆனால் நம்மில் இன்னும் பல அமெச்சூர் முதலீட்டாளர்கள் உச்சியில் வாங்குவதும் பிறகு திட்டிக்கொண்டு பாதாளத்தில் விற்பதும் சகஜம். சந்தை உச்சியில் இருக்கும்போது பல பங்குகளின்/நிறுவங்களின் மதிப்பு, டிமாண்ட் அதிகமாக இருப்பதால், எட்ட முடியாத தூரத்தில் இருக்கும்.

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189

Stocksandshareanalyst @ https://bit.ly/2JHOzJw


No comments:

Post a Comment