குரோத் நிறுவனங்களின் குணாதிசயங்கள் என்னென்ன?
வேல்யூ பங்குகளுக்கு நேர் மாறாக இருக்கும் பிஇ, பிபிவி கொண்டவையாக இருக்கும்.
வரும் லாபம் அனைத்தையும் இந்நிறுவனங்கள் திரும்ப தனது தொழில் வளர்ச்சிக்காக முதலீடு செய்து விடுவதால், டிவிடெண்ட் பெரும்பாலும் மிகமிகக் குறைவாக இருக்கும்.
ஐ.டி., பயோடெக்னலாஜி போன்ற புதிய பொருளாதாரத்தைச் சார்ந்த நிறுவனங்களாக இருக்கும் அல்லது, அதிவேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் / நாடுகளில் / துறைகளில் இடம் பெற்றிருக்கும்.
அந்நிறுவனங்களின் அதீத வளர்ச்ச்சியால், நிகர லாபம் அதிகரித்துக் கொன்டே செல்லும். அதனால் அதன் பங்கு விலையும் உயர்ந்து கொண்டே செல்லும்.
இது போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்பவர்கள் முதலீட்டைப் பெருக்கும் நோக்கத்துடனே முதலீடு செய்வர்.
வாரன் பஃபட் போன்றோர் வேல்யூ மற்றும் குரோத் இன்வெஸ்டிங் ஆகிய இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று கூறுகின்றனர். அவரைப் பொறுத்தவரை வேல்யூ ஒரு கால் என்றால் குரோத் இன்வெஸ்டிங் இன்னொரு கால். இந்த இரண்டு கால்களும் இடுப்பில் தான் சேர்கின்றன என்கின்றார்.
நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்
For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189
No comments:
Post a Comment