Saturday, 11 August 2018

ஒர்க்கிங் கேப்பிட்டல் என்றால் என்ன ?

ஒர்க்கிங் கேப்பிட்டல் என்றால் என்ன ?



எந்த ஒரு தொழிலிலும் அசையும் சொத்துக்கள் மற்றும் அசையாச் சொத்துக்கள் என இரு வகை இருக்கும். அசையாச் சொத்துக்களை எளிதில் பணமாக்க முடியாது.

அதேசமயத்தில் அசையும் சொத்துக்களான பேங்க் டெபாசிட், இன்வென்டரி (குடோனில் உள்ள பொருட்கள் ), வரவேண்டிய சிறு கடன்கள், வேலை நடந்து கொண்டிருக்கும் பொருட்கள் போன்றவற்றை எளிதில் குறுகிய காலத்தில் பணமாக்க முடியும்.

அதே போல, நடப்பு காலத்தில் கொடுக்க வேண்டிய கடன்களும் கொஞ்சம் இருக்கும். நடப்பு காலத்தில் பெறக்கூடிய சொத்துக்கும், நடப்பு காலத்தில் கொடுக்க வேண்டிய கடன்களுக்கும் உள்ள வித்தியாசம்தான் ஒர்க்கிங் கேப்பிட்டல்.

Stocksandshareanalyst @ https://bit.ly/2JHOzJw

No comments:

Post a Comment