லாபம் அளிக்கும் வகையில் முதலீடு செய்வது எப்படி?
திட்டங்களின் வரலாற்றைப் பாருங்கள்
திட்டங்களின் வரலாற்றைப் பாருங்கள் முதலீட்டாளர்கள் குறைந்த விலை நிகர மதிப்புடைய சொத்து மதிப்புகளால் ஈர்க்கப்படக்கூடாது. ஏனெனில் அவை மலிவானவை என்று அர்த்தமில்லை. ஒரு குறிப்பிட்ட பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதற்கு முன் அந்தத் திட்டத்தின் கடந்த கால வருவாய், செலவு விகிதங்கள், நிதிகளின் துறை சார்ந்த வெளிப்பாடு, நிதி மேலாளரின் கடந்த கால செயல்பாடு ஆகியவற்றை ஒப்பிடுங்கள்.
அதனுடன் அந்த நிதியின் குறுகிய கால லாபத்தைக் கவனிக்காதீர்கள். ஏனெனில் குறுகிய கால வருவாய் உங்களுக்கு ஒரு தவறான மாயப் பிம்பத்தை கொடுக்கலாம். அதிகபட்சமாக 4-5 திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதை வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஏனெனில் இந்தத் திட்டங்களை மிக எளிதாகக் கண்காணிக்க முடியும். பல திட்டங்களுக்கு இடையிலான வருவாயை மிகக் குறைந்த அளவே மாறுபடுவதினால் அந்தத் திட்டங்களின், குறிப்பாகக் கடன், குறியீட்டு மற்றும் செயலற்ற நிதி ஆகியவற்றின் வருமானத்தைக் கண்டிப்பாக ஒப்பிடவும்.
No comments:
Post a Comment