Thursday, 30 November 2017

Stocks And Share Analyst

Stocks And Share Analyst




"பங்குச்சந்தை" என்பது பலருக்கு புரியாத புதிர் மட்டும் அல்ல அறிவுக்கு விளங்காத போதையூட்டும் ஒரு வியாபாரமும் கூட. 

சரியான நேரத்தில் சரியான விலைக்கு பங்குகளை வாங்கி விற்றோமானால் இதனை போன்ற பணம் அறுவடை தரும் நிலம் எதுவும் இல்லை. 

ஆனால் தவறான முடிவுகள் அதே நிலத்தில் குழி தோண்டி புதைத்துவிடும் என்பதையும் மறந்துவிடலாகாது.

இந்திய பங்குச்சந்தையில் பங்கு பரிவர்த்தனை செய்ய விரும்புவோர்கள் முதலில் ஒரு நல்ல பங்குத்தரகரை தேர்வு செய்தல் வேண்டும்.

பங்குத்தரகர் என்பவர் யார்? 

1. இந்தியாவில் வங்கிகளை மேலாண்மை செய்ய எப்படி RBI (Reserve Bank Of India) என்ற அமைப்பு உள்ளதோ, அதைப்போல பங்குச்சந்தையை கண்காணிக்க SEBI (Securities and Exchange Board Of India) என்ற அமைப்பு உள்ளது. 
இந்த அமைப்பின் அனுமதி பெற்று, அலுவலகம் அமைத்து பொது மக்களுக்கிடையே பங்குபரிவர்த்தனை நடைபெற உதவும் நபரே பங்குத்தரகர் எனப்படுவார்.

2. பங்குகளை வாங்கவோ இல்லை விற்கவோ வேண்டுமானால் இந்த பங்குத்தரகரிடம் நாம் ஒரு கணக்கு துவங்க வேண்டும். அதன் மூலமாகவே 
பரிவர்த்தனைகள் நடக்கும். பங்குகளை நாம் வாங்கினால் யாரிடம் இருந்து வாங்குகிறோம் என்பது தெரியாது. விற்கும் பொழுதும் யாரிடம் 
விற்கிறோம் என்பது தெரியாது. ஆனால் இவர்களால், பணம் வரவு செலவு சரியாக நடந்துவிடும். 

3. ஒரு நல்ல பங்குத்தரகரின் வேலை, பங்குகளை வாங்க, விற்க உதவுவது மட்டும் அன்று. எந்த பங்கினை வாங்க வேண்டும், எப்பொழுது விற்க வேண்டும் என்று அறிவுறுத்துவதும் ஆகும்.

-laabamae

Stocks and Share Analyst
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189


No comments:

Post a Comment