Thursday, 30 November 2017

லாபம் அளிக்கும் வகையில் முதலீடு செய்வது எப்படி?




எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யுங்கள் 

உயர் சந்தை மதிப்பீடுகளின் பிடியில் சந்தைகள் இருந்தாலும் சந்தை எப்பொழுதும் காலத்திற்கு கட்டுப்பட்டது கிடையாது. 

பங்குச் சந்தையில் ஏற்படக் கூடிய எந்த ஒரு பெரிய வீழ்ச்சியும் லாபங்களை அகற்றலாம் அல்லது ஆரம்ப முதலீட்டின் மதிப்பைக் குறைக்கக்கூடும் என்பதால், பங்குச் சந்தைக்குள் எப்பொழுது நுழைந்து எப்பொழுது வெளியேறுவது என்பதை எந்தவொரு நிபுணரும் அறிவதில்லை. 

முறையான முதலீட்டுத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பெரிய செல்வத்தை உருவாக்க முடியும்.

ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்வதன் மூலம், சந்தையின் உச்சம் அல்லது தாழ்வு நிலைகளில் நாம் முதலீடு செய்வது உறுதி செய்யப்படுகிறது.

முதலீட்டாளரைப் பொறுத்தவரை, அவருடைய சிறிய வயதில் இருந்தே முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் உங்களுடைய ஆரம்பக் காலத்தில் ஆரம்பித்திருந்தால், உங்களுடைய சொத்தின் மதிப்பு நீண்ட காலத்திற்கு மேலாக வளர்ந்து மிகப் பெரிய தொகையாக இருக்கும். 

உங்களுடைய முதலீட்டில் குறைந்தது 80 சதவீதம் பங்குச் சந்தை சார்ந்த முதலீடாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய சொத்து மதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.



No comments:

Post a Comment