Monday, 11 December 2017

ஷேர் வியாபாரம் என்றால் என்ன?

ஷேர் வியாபாரம் என்றால் என்ன?






கம்பெனிகள் எனப்படும் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் , பொது மக்களிடமிருந்து பணத்தை முதலீடாகப் பெற , பங்குகள் எனப்டும் ஷேர்களை 'விற்பார்கள் '. ஒரு ஷேருக்கு இவ்வளவு பணம் என்று குறிப்பிட்டுயிருப்பார்கள். இந்த கம்பெனிகளில் பிரைவேட் லிமிடெட் கம்பெனி ,பப்ளிக் லிமிடெட் கம்பெனி என்று இரண்டு வகை உண்டு.

இந்த பப்ளிக் லிமிடெட் வகையில் வரும் கம்பெனிகள் சிலவற்றை , பங்குச்சந்தைகள் எனப்படும் ஷேர் மார்க்கெட்டில் லிஸ்ட் செய்திருப்பார்கள். இந்தச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட கம்பெனிகளின் ஷேர்களை எவரும் Online Share Broking மூலம் வாங்கலாம்,விற்கலாம்.

உதாரணத்துக்கு இந்தியாவின் பங்குச்சந்தைகளான மும்பை பங்குச்சந்தை ,தேசிய பங்குச்சந்தை ஆகிய இடங்களில் கோல்கேட் (colgate), இந்துஸ்தான் லீவர்(HLL), இன்போசிஸ் (Infosys), ரிலையன்ஸ் (Reliance), என்ற சில நிறுவனங்கள் ஷேர்கள் கிடைக்கும் . இவற்றின் ஆரம்ப விலைகள் , தற்போதைய விலைகள் எல்லாம் கேட்டால் ,தலையைச் சுற்றும்.அவ்வளவு லாபம். 

சேஷ கோவா(Sesa Goa) என்ற நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை , டிசம்பர் 2003 ல் ரூ .180.யார் வேண்டுமானாலும் வாங்கி இருக்கலாம் .விஷயம் தெரிந்த பலரும் வாங்கினார்கள் . ஜனவரி 2007-ல் அந்த பங்கின் விலை ரூ .1690 ( இத்தனைக்கும் நடுவில் ஒன்றுக்கு ஒன்று இலவசப் பங்கு கொடுத்த பிறகு இந்த விலை ! இலவசப் பங்குகளின் மதிப்பையும் சேர்த்தால் ரூ .3,380).

டிசம்பர் 2003 -இல் சேஷ கோவாவின் 55 பங்குகளை பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கியிருக்கலாம் . அதே 55 பங்குகளை, ஜனவரி 2007 - இல்  விற்றிருந்தால் , ரூ 1,75,900  கிடைத்திருக்கும் . போட்ட 10,000 ரூபாய், 37 மாதத்தில் கிட்டத்தட்ட 18 மடங்கு ஆகிவிட்டது . இதுதான் ஷேர் மார்க்கெட்டின் பலம் . இன்றைக்கும் ஏன் இந்த ஷேரைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் ? நாம் 180 ரூபாய்க்கு வாங்கினோம். Ex-bonus  விலை 1,690 ஆகிவிட்டதே ! விற்று விடலாமா ? மார்க்கெட்டில் விசாரிப்பார்கள் . சிலர் சொல்வார்கள் .
'இதை போயி விற்கிறீர்களா ? செய்யாதீர்கள் . இரும்புத் தொழிலில் இருக்கும் நிறுவனம் அது. கொழுத்த லாபம் (வார்த்தையை கவனியுங்கள் )சம்பாதிக்கிறது . இந்த ஷேர் விலை கட்டாயம் 2,000 ரூபாய்க்கும் போகும் .இப்போது விற்காதீர்கள்.

இதைக்க  கேள்விப்பட்ட பிறகு, அந்த ஷேரை விற்க முடியுமா ? சிலரால் முடியாது . சிலரால் முடியும் . அதுதான் ஷேர் செய்ய கொஞ்சம் ஞானம், கொஞ்சம் பணம் மற்றும் முக்கியமாக நிறைய ' நிதானம்' வேண்டும் அதோடு Online Share Broking பற்றி நுணுங்கள் தெரிந்திருக்க வேண்டும் .இதே சேஷ கோவா ஷேர் ரூ .2000-ஐத் தொடலாம் . அதையும் தாண்டலாம். அல்லது இந்த 1,690 ஐ விடவும் கீழே இறங்கலாம் .அதன் விலை நடுவில் இறங்கியது.வரும் ஆண்டில்   -ல் ரூ .380 -இக்கும் குறைவாகக் கூட வரலாம் . எவராலும் இதனை அறுதியிட்டுக்  கூற முடியாது . அதுதான் ஷேர் மார்க்கெட் . அதனால் தான் அது பலருக்கும் அவ்வளவு சுவாரசியமாக  இருக்கிறது !

இவ்வளவு சுவாரசியமான ஷேர் வியாபாரம் , புரிந்து கொள்ள முடியாததும் அல்ல . Everytging Is Difficult Untill It Becomes Easy என்பார்கள். எதுவும் முதலில் கொஞ்சும் புரியாது தான் .சைக்கிள் விடுவது ,சமையல் செய்வது ,மேடையில் பேசுவது ,கோபத்தை அடக்குவது போல இதுவும் கொஞ்சம் பழகினால் வந்துவிடும் .ஷேர்களும் இதற்கு விதிவிலக்கல்ல . ஷேர்கள் ஆங்கிலம் சம்பந்தப்பட்டதும்  அல்ல . ஆங்கில அறிவு இல்லாதது அதற்கு ஒரு தடையாக இருக்க முடியாது. ஷேர்களை புரிந்து கொள்வதும் சுலபம் . செய்வதும் சுலபம்தான் . Online Share Broking ஐ பற்றி தெரிந்து கொள்ள மற்றும் அதன் முழு விவரங்களை பற்றி அறிய பங்கு சந்தையில் சிறந்த வல்லூரான M K Prabhagharan, KKP Capital-Karur  அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் மேலும் ஷேர்களை பற்றி அறிய http://mkprabhagharan.com/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment