Monday, 18 December 2017

உங்களைப் பணக்காரர் ஆக்கும் 10 விஷயங்கள்!



உங்களைப் பணக்காரர் ஆக்கும் 10 விஷயங்கள்!

Part -1

1. ஒரு விதையைப் பெட்டிக்குள் அடைத்து வைத்தால், எத்தனை ஆண்டுகளானாலும் அது விதையாகவே இருக்கும். அதையே மண்ணில் விதைக்கும்போதுதான் அது செடியாக, மரமாக வளர்ந்து பயனளிக்கும்.அதுபோலத்தான் நம்முடைய பணமும் முதலீடு செய்தால் மட்டுமே வளர்ச்சியடையும்.

2. முதலீடு செய்தால் மட்டும் போதாது; முதலீடு என்பது விலைவாசியைத் தாண்டி வளர்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். அப்போதுதான் நாம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறோம் என அர்த்தமாகும்.

3. உலகின் எட்டாவது அதிசயமான கூட்டு வட்டியின் மகிமையை உணர வேண்டும். அதற்கு நாம் நீண்ட காலம் முதலீடு செய்ய வேண்டும். இதற்கான எளிய ஃபார்முலா இதோ... 

முதலீட்டு மீதான வருமானம் > பணவீக்கம் = செல்வம் பெருக்கம்

முதலீட்டு மீதான வருமானம் < பணவீக்கம் = செல்வம் இழப்பு

4. எந்தவொரு பொருளை உற்பத்தி செய்வதற்கும் மூலப்பொருள் அவசியமாகிறது. 

அதுபோல, எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனமும் வளர்ச்சியடைய வாடிக்கையாளர் எனப்படும் (consumer) ஆதாரம் அவசியமாகிறது. 

கார்ப்பரேட் நிறுவனங்கள் நம்மைப் பயன்படுத்தி (130 கோடி மக்கள்) வளரும்போது, நாம் ஏன் கார்ப்பரேட் நிறுவனங்களில் முதலீடு செய்து வளரக்கூடாது என்பதை உணர வேண்டும். 

5. வாடிக்கையாளராக மட்டுமே இருந்து வேடிக்கைப் பார்ப்பதை விடுத்து, நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் பங்கு தாரராக மாற வேண்டும். 

ஒரு சிறு தொகையை முதலீடு செய்வதன் மூலம் மறைமுகமாக நாமும் பல பெரிய நிறுவனங்களில் மைக்ரோ முதலாளி யாக மாறுகிறோம். நம் முதலீடும் கார்ப்பரேட் நிறுவனங்களோடு சேர்ந்து வளரும்.

-vikatan

Stocks and Share Analyst
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189





No comments:

Post a Comment