மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எப்படிச் செயல்படுகிறது?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எப்படிச் செயல்படுகிறது?
“எந்த ஒரு செயலுக்கும் குறிக்கோள் மிக அவசியம். அதைப்போல முதலீடு செய்யும்போதும் நமது குறிக்கோளைப் பிரதானப்படுத்தி அந்தக் குறிக்கோளுக்கு உதவியாக இருக்கும் முதலீட்டுக்கான ஃபண்ட்களைத் தேர்வுசெய்ய வேண்டும்.
நம்முடைய குறிக்கோளை அடைவதற்கு எந்த மாதிரியான வழியைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிந்துகொள்வது அவசியம்.
உதாரணமாக, ஒருவருக்கு இரண்டு வயதில் மகனோ / மகளோ இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
அவர்களது உயர் கல்விக்கோ, திருமணத்துக்கோ ஒரு பெரிய தொகை வேண்டுமென்றால், அந்தப் பெரிய தொகை எவ்வளவு வேண்டும் என நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.
குறைந்தது 16 வருடங்கள், அவர்களுக்கு நீண்டகால குறிக்கோளாக வைத்துக்கொண்டு, ஒரு நல்ல டைவர்சிஃபைட் (diversified) அல்லது குழந்தைகளுக்கு பிரத்யேகமான திட்டத்தில் மாதத்தின் அடிப்படையில் (SIP) முதலீடு செய்தால், அந்த முதலீடு எத்தனை சதவிகிததில் (8%, 10%, 12%) வளர வேண்டும் என்பதற்கான முதலீட்டைத் தேர்ந்தெடுத்துகொள்ளலாம்.
இதைத் தெரிந்துகொள்ள மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்களது முதலீட்டின் உண்மையான நிலையை அறிய மாதாமாதம் அறிக்கையை (Fact Sheet) வெளியிடுகிறார்கள். இதை எல்லோராலும் மிக எளிதாகப் பார்க்க முடியும்
- vikatan
Stocks and Share Analyst
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189
No comments:
Post a Comment