Wednesday, 2 August 2017

10000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது நிஃப்டி

10000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது நிஃப்டி



தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டெண் நிஃப்டி 10,000 புள்ளிகளைக் கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

முந்தைய செவ்வாய்க் கிழமை வர்த்தக நேரத்தில் பத்தாயிரம் புள்ளிகளைக் கடந்த போதும் அதனைக் கடந்து நிலைபெற இயலாமல் வர்த்தக நேர இறுதியில் புள்ளிகள் குறைந்தே நிலைபெற்று வந்தது. அதனால் பங்குச் சந்தைகள் கடந்த சில தினங்களாக தள்ளாட்டத்திலேயே இருந்து வந்தன.

புதன் கிழமையும் பங்குச் சந்தை தள்ளாட்டத்திலேயே வர்த்தகமான போதும் 56.10 புள்ளிகள் உயர்ந்து 10,020.65 புள்ளிகளில் நிலைபெற்றது.

தேசிய பங்குச் சந்தையின் வரலாற்றில் முதன் முறையாக 10,000 புள்ளிகள் என்ற மைல்கல்லை எட்டி நிறைவடைந்துள்ளது.

கடந்த 1996ம் ஆண்டு நிஃப்டி 1000 புள்ளிகள் என்ற கூட்டு மதிப்புடன் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் ஆண்டு தோறும் படிப்படியாக உயர்ந்து 20 ஆண்டுகளில் 9000 புள்ளிகளைக் கடந்துள்ளது.

இந்நிலையில் செவ்வாயன்று முதன் முறையாக நிஃப்டி 10,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமானது.எனினும் வர்த்தக நேர முடிவில் பத்தாயிரம் புள்ளிகளைவிடக் குறைந்து 9,965 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

இந்நிலையில் புதன்கிழமை 18 புள்ளிகள் அதிகரித்து 9 ஆயிரத்து 983 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இது படிப்படியாக உயர்ந்து, அதிகபட்சமாக 10,025 புள்ளிகளைத் தொட்டது. வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 10,020 புள்ளிகள் என்ற அளவில் இருந்தது.

நிஃப்டியை நிர்ணயிக்கும் 50 முதல்தர பங்குகளில் 30 பங்குகள் உயர்ந்தும், 21 பங்குகள் குறைந்தும் நிலைபெற்றன.


No comments:

Post a Comment