பங்கு,ஃபண்ட் முதலீடு... லாபம் பார்க்க 10 அம்சங்கள்!
4. ரிஸ்க் எடுத்தால் ரிவார்ட்!
வயது, அறிவு மற்றும் அனுபவத்துக்குத் தக்க ரிஸ்க் எடுப்பதில் தவறில்லை. முதலீட்டைப் பொறுத்தவரையில், எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கிறீர்களோ, அந்த அளவுக்கு ரிவார்ட், அதாவது விருது - வருமானம் கிடைக்கும். பொதுவாக, 100-லிருந்து ஒருவரின் வயதை கழித்துவரும் சதவிகிதத் தொகையை ஈக்விட்டி அல்லது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். அடுத்து மிக முக்கியமாக, எந்த முதலீட்டில் எவ்வளவு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை அறிந்து ரிஸ்க் எடுப்பது அவசியம். இதனை ‘கால்குலேட்டட் ரிஸ்க்’ என்பார்கள். மேலும், ரிஸ்க்கை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இருப்பது அவசியம்.
No comments:
Post a Comment