Wednesday, 9 August 2017

நீண்ட கால முதலீட்டின் கவனத்திற்கு..!

நீண்ட கால முதலீட்டின் கவனத்திற்கு..!





ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முன் அந்த நிறுவனத்தை பற்றிய முக்கியமான விசயங்களை அறிந்து கொள்ள வேண்டும். அதற்குத்தான் செய்தித்தாள் மற்றும் பங்குச்சந்தை சம்மந்தப்பட்ட வலைத்தளங்களை பார்க்க வேண்டும்.

அந்த நிறுவனம் எந்த துறையில் இருக்கிறது.அந்த துறையின் எதிர்கால வாய்ப்புக்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, கட்டமைப்பு (INFRASTRUCTURE), எரிசக்தி (POWER) மற்றும் நுகர்வோர் பொருட்களை தயாரிக்கும்/விற்கும் நிறுவனங்கள் (FMCG) என்று சொல்லப்படும் துறைகளில் முதலீடு செய்வது அதிக பாதிப்புக்குள்ளாகாது என்று நம்பப்படுகிறது.

இப்படி நிறுவனம் செய்யும் தொழில் மற்றும் அது இருக்கும் துறையை பற்றி தெரிந்தபின், குறிப்பிட்ட நிறுவனம் எப்படி செயல் படுகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அந்த நிறுவனத்தின் நிதி விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். அதாவது அந்த நிறுவனத்தின் வருடாந்திர லாப நஷ்ட கணக்கு (Profit and Loss Account) மற்றும் நிதிநிலை அறிக்கை (Balance Sheet) ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment