நிறை குறைகளை உணர்ந்து தேர்வு செய்ய வேண்டும்
உச்சத்தில் தொடர்ந்து வீற்றிருக்கும் சந்தை குறியீடுகள், சந்தைக்குள் வர காத்திருப்போர் மனதில் ஒருவித அவசர நிலையை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக,வைப்பு கணக்குகளில் இருந்து பங்கு சந்தைக்கு இடம்பெயர விரும்புவோர் அலை அலையாக, பரஸ்பர நிதி திட்டங்களில் பணத்தை செலுத்துகின்றனர்.
அப்படியானால் குறுகிய கால முதலீடுகளை எங்கு செய்தால் நல்லது?
வங்கியில் அவசர தேவைக்கு வைத்திருக்கும் பணத்தை பங்கு திட்டங்களில் ஒருபோதும் முதலீடு செய்யக்கூடாது.அவற்றை குறுகிய கால வைப்புக் கணக்குகளிலோ, அல்லது பரஸ்பர நிதிகளின் குறுகிய கால கடன் திட்டங்களிலோ முதலீடு செய்வது நல்லது. நம் பணத்தேவைகளை நன்கு புரிந்து அவை எந்த வகையிலும் சிக்கல்களுக்கு ஆளாகாமல் இருக்க முதலீட்டு தேர்வுகளை கவனமாக செய்யவேண்டியது மிக அவசியம்.
No comments:
Post a Comment