பங்கு,ஃபண்ட் முதலீடு... லாபம் பார்க்க 10 அம்சங்கள்!
முதலீட்டை பிரித்துச் செய்க!
எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைத்தால் எப்படி அதிக ரிஸ்கோ, அதே போல் அனைத்து முதலீடுகளையும் ஒரே பிரிவில் மேற்கொள்வது சரியாகாது. உதாரணத்துக்கு, ஒருவர் தன் அனைத்து முதலீடுகளையும் பங்குச் சந்தையில் மேற்கொண்டிருக்கிறார் என்கிறபோது சந்தை சரிந்தால் அவரது முதலீட்டின் மதிப்பும் சரியும். இதனைத் தவிர்க்க இண்டெக்ஸ் பங்குகள், பேலன்ஸ்டு ·ப்ண்டுகள், டைவர்சி·பைடு ·ப்ண்டுகளில் முதலீட்டைப் பிரித்து மேற்கொள்ள வேண்டும். 5-10 பங்குகள் மற்றும் 3-5 ·பண்டுகளில் முதலீட்டை மேற்கொண்டால் தான் முதலீட்டின் வளர்ச்சியை சராசரியாகக் கவனித்து அதிக லாபம் ஈட்ட முடியும். தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் தேவைக்கேற்ப முதலீட்டை மேற்கொண்டால் போதும். 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முதலீட்டைத் தொடர்வது மிகவும் நல்லது. அப்படிச் செய்யும் போது ரிஸ்க் பரவலாக்கப்படுவதோடு, அதிக வருமானமும் கிடைக்கும்.
No comments:
Post a Comment