பி/இ விகிதம்: பங்கு முதலீட்டில் லாபம் தரும் சூட்சுமம்!
பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பங்குகளை நீண்ட கால முதலீட்டுக்கு வாங்குவதற்கு அடிப்படை ஆராய்ச்சி யுக்திகளை தெரிந்திருத்தல் அவசியம். அப்படி தெரிந்து அறிந்து பங்குகளை வாங்கும்போது முதலீட்டாளர்களுக்கு லாபகரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதுபோன்ற அடிப்படை ஆராய்ச்சி யுக்திகள் பல இருந்தாலும் வெற்றிகரமான முதலீட்டாளர்கள் பி/இ விகிதம் (P/E ratio) என்ற யுக்தியை அதிகம் கவனித்து அதனடிப்படையில் நிறுவனங்களுடைய பங்குகளை வாங்குவார்கள். அந்த யுக்தி தான் பல முதலீட்டாளர்களின் தாரக மந்திராமாக விளங்குகிறது. பார்ப்பதற்கு ஒரு எளிமையான சாதரணமான யுக்தியாகக் அறியப்பட்டாலும் பங்குகளின் மதிப்பை அறிய ஒரு வலுவான யுக்திதான் இந்த பி/இ விகிதம் என்ற யுக்தி.
பி/இ விகிதங்கள் பல்வேறு இருக்கின்றன இருந்தாலும் , அடிப்படையான விளக்கம் இதோ...
ஒரு பங்கின் விலை
பி/ இ ரேஷியோ = ------------------------------ -----------
பங்கின் ஆண்டு வருமானம்
உதாரணத்திற்கு, ஒரு நிறுவனத்தின் பங்கின் தற்போதைய சந்தை விலை 100 ருபாய் என்று எடுத்துகொள்வோம். அதனுடைய ஒரு பங்கு ஆதாயம் மிகச் சமீபத்திய 12 மாதங்களுக்கு 10 ருபாய் என்றும் வைத்துக்கொள்வோம். அந்தப் பங்கின் பி/இ விகிதமானது 100/10=10 என்று வழங்கப்படும்.
தொடரும்..
No comments:
Post a Comment