பங்குச் சந்தையில் ஜெயிக்க பத்து வழிகள்!
புதியன புகுதலும் பழையன கழிதலும்தான் வாழ்க்கை. வருவதும் போவதுமாக இருப்பதுதான் சந்தை. இதற்கு ஷேர் மார்க்கெட்டும் விதிவிலக்கல்ல. 2004 தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக பங்குச் சந்தை முதலீட்டுக்குள் நுழைய ஆரம்பித்தார்கள் நம்மூர் முதலீட்டாளர்கள். 2008 வரை அபரிமிதமான லாபத்தைச் சம்பாதித்தார்கள். அதற்குபிறகு ஏற்பட்ட சரிவின்போதுதான், சந்தை என்பது ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது என்பதைப் பலரும் புரிந்துகொண்டனர்.
இவர்கள் கண்ணை மூடிக்கொண்டு சந்தைக்குள் குதிக்காமல், ஓரளவுக்கு விஷயத்தைத் தெரிந்துகொண்டு முதலீட்டைத் தொடங்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த இளநிலை முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் ஜெயிக்க பத்து வழிகள் உள்ளன.
1. நீங்களும் ஒரு பிசினஸ்மேன்!
பங்குச் சந்தையில் ஏன் முதலீடு செய்ய நினைக்கிறீர்கள்? என்கிற கேள்விக்கு முதலில் பதில் தெரிந்துகொள்ளுங்கள். எஃப்.டி.யில், பாண்டில், தங்கத்தில், ரியல் எஸ்டேட்டில் என எல்லா முதலீடுகளிலும் கிடைக்கும் வருமானத்தைவிட பங்குச் சந்தை மூலம் கிடைக்கும் வருமானம் அதிகம் என்பது வரலாறு. ஆனால், இந்த லாபம் உங்களுக்கு சும்மா கிடைத்துவிடாது. அதற்காக நீங்கள் கொஞ்சமாவது உழைக்கவேண்டும். முதலில் உங்களை நீங்கள் ஒரு பிசினஸ்மேனாக மாற்றிக்கொள்ள வேண்டும். பங்குச் சந்தைக்கு நீங்கள் வருவதே பிசினஸ் செய்யத்தான். அந்த பிசினஸை சரியாகச் செய்தீர்கள் எனில், லாபம் உங்களைத் தேடி வரும். தெரியாத பிசினஸை தப்புந் தவறுமாகச் செய்தால், கையில் உள்ள பணம்தான் கரையும்!
No comments:
Post a Comment