Wednesday, 20 September 2017

3. தெரிந்ததைச் செய்யுங்கள்!

3. தெரிந்ததைச் செய்யுங்கள்!


பிசினஸில் ஜெயிப்பதற்கு சிம்பிளான வழி தெரிந்த பிசினஸை செய்வது. பங்குச் சந்தை பிதாமகர் வாரன் பஃபெட் இன்றைக்கு அத்தனை பெரிய பணக்காரராக இருக்க காரணம், இந்த சிம்பிள் விஷயம்தான். ஒரு நிறுவனத்தின் உற்பத்திப் பொருளுக்கு (அ) சேவைகளுக்கு யார், யாரெல்லாம் வாடிக்கையாளர்கள்; அவர்களின் ஆதரவு எது நாள் வரை கிடைக்கும்; நிறுவனத்தின் போட்டியாளர்கள் யார், அவர்களின் திறமை எப்படி?, அந்த நிறுவனம் சார்ந்த துறையின் எதிர்காலம் எப்படியிருக்கும்? என்பதையெல்லாம் அலசி ஆராய்வதுதான் ஃபண்டமென்டல் அனாலிசிஸ். 

எந்தவொரு கம்பெனியும் வரவு, செலவுக் கணக்குகளைப் பராமரித்து, லாப-நஷ்ட அறிக்கை ((P&L a/c)), பேலன்ஸ்ஷீட் போன்ற நிதிநிலை அறிக்கைகளை வெளியிடுவார்கள். அதிலும், எக்ஸ்சேஞ்சுகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் கண்டிப்பாக ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் காலாண்டு அறிக்கை களை முதலீட்டாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்த பேலன்ஸ்ஷீட்டில் வருமானம், செலவுகள், லாபம், நஷ்டம், அசையும், அசையாச் சொத்துக்களின் மதிப்பு, கடன்கள், மொத்தப் பங்குகளின் எண்ணிக்கை, புரமோட்டர்களின் பங்கு விகிதம் போன்ற தகவல்களைக் கொஞ்சம் அலசி ஆராய்ந்து நீங்களே ஒரு முடிவுக்கு வரலாம். ஆரம்ப காலத்தில் சில நம்பத்தகுந்த ஆய்வு நிறுவனங்கள் தரும் ரிப்போர்ட்களைப் படித்து, அவை சரியாகத்தான் ஆராய்ந்திருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு அதன்படியும் முதலீடு செய்யலாம்.

பல ஆயிரம் பங்குகள் இருக்கே! இவற்றின் பேலன்ஸ்ஷீட்களை எல்லாம் நான் ஆராயத் தொடங்கினால் எப்போது முதலீடு செய்வது என்று நீங்கள் கேட்பீர்கள். ஒரே ஒரு சின்ன ஷார்ட் கட் வழி சொல்கிறேன். நிஃப்டி இண்டெக்ஸில் இருக்கும் 50 நிறுவனங்களை மட்டுமே முதலீடு செய்வதற்கு பரிசீலிக்கலாம். வலிமையான நிறுவனங்களே நிஃப்டி இண்டெக்ஸில் சேர்க்கப்பட்டு உள்ளதால், நம் வேலை சுலபம்.


No comments:

Post a Comment