Tuesday, 26 September 2017

பங்குச் சந்தையில் ஜெயிக்க பத்து வழிகள்!

பங்குச் சந்தையில் ஜெயிக்க பத்து வழிகள்!


நேரம் பார்த்து வெட்டிவிடு!

பங்குச் சந்தை முதலீடு ரிஸ்க் நிறைந்தது என்பதை ஆரம்பத்திலேயே சொன்னேன். ஆனால், இந்த ரிஸ்குகளைக் குறைப்பதற்கான (ரிஸ்க் மேனேஜ்மென்ட்) வழிகளை இப்போது சொல்கிறேன்.

பங்குச் சந்தை அனுபவஸ்தர்கள் ‘Never marry a stock’ என்று சொல்வார்கள். எந்த ஒரு பங்கையும் கல்யாணம் பண்ணிக்கொள்ளாதீர்கள்! எப்போது ஒரு பங்கினால் நமக்கு நஷ்டம் வருகிறதோ, அப்போதே அதை கைகழுவிவிட வேண்டும். விலை குறையும் பங்கு கீழ்நோக்கி வரும் கத்தி மாதிரி. அதைப் பிடிக்க நினைத்தால், நம் கை ரத்தக்களறி ஆகிவிடும். 
அதேபோல, நாம் வாங்கிய பங்கின் விலை லாபத்தில் இருக்கிறது. போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து என்று நினைத்து, நேரம் பார்த்து வெட்டிவிட வேண்டியதுதான். உச்சத்தில் இருக்கும் பங்கு விலை மீண்டும் குறையும். குறிப்பிட்ட அளவு குறைந்தபிறகு மீண்டும் உயரும்.

ஒரு பங்கு இப்படி ஒரு டிரெண்டில் இருக்கும்போது மீண்டும், மீண்டும் என்ட்ரி வாய்ப்புகளை மார்க்கெட் தந்துகொண்டே இருக்கும். எந்த ஒரு பங்கையும் அளவுக்கதிகமாக காதலித்து கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தால், புல்பேக் (pullback) எனப்படும் பின்னிழுப்பு ஏற்படுகிறபோது பங்கின் விலையோடு நாமும் விழவேண்டியிருக்கும்.நஷ்டத்தைக் குறைத்து லாபத்தை வளர்க்க வேண்டுமெனில் நேரமறிந்து வெளியேபோய், மீண்டும் உள்ளே வரவேண்டும்.


No comments:

Post a Comment