பங்குச் சந்தையில் ஜெயிக்க பத்து வழிகள்!
மார்க்கெட் தனது போக்கில் வருகிறவர்களைத் தன்னுடன் அழைத்துச் செல்லும். எதிர்ப்போக்கில் செல்கிறவர்களை உதறித்தள்ளும்!’ என்பது சந்தைச் சொல்லும் தத்துவம்.
ஒரு டிரெண்டைக் கண்டுபிடித்து அந்த டிரெண்டின் திசையிலேயே, ஒருவர் தன்னுடைய டிரேடுகளை அமைத்துக் கொண்டால் சக்சஸ்தான். ஒரு பங்கை வாங்கிய பின் சில நாட்களில், சில வாரங்களில் விலை உயர்ந்தால், அந்தப் பங்கு அப்-டிரெண்டில் இருக்கிறது என்று அர்த்தம். இந்த நேரத்தில் சப்ளை குறைந்து டிமாண்ட் அதிகமாக இருக்கும் என்பதால் உங்களுக்கு லாபம்தான். ஒரு பங்கை வாங்கிய சில நாட்களில், சில வாரங்களில் விலை குறைந்தால் அது டவுன்-டிரெண்ட். இந்தச் சமயத்தில் டிமாண்ட் குறைந்து, சப்ளை ஓவராக இருக்கும். இதனால் உங்களுக்கு நஷ்டம்தான். டிமாண்ட் அதிகரிக்க அதிகரிக்க, மார்க்கெட்டில் காளைகளின் ஆதிக்கம் அதிகமாகி, நீங்களும் ஒரு காளையாக இருக்கவேண்டும். ஆனால், சப்ளை அதிகமாகி விலை கீழேயிறங்கும்போது, கரடிகளின் ஆதிக்கம் அதிகமாகும். அப்போது கரடி அவதாரம் எடுத்தாக வேண்டும். அந்தச் சமயத்தில் நான் காளைதான் என்று நின்றீர்கள் எனில் கரடிகளிடம் கடிபடுவதைத் தவிர வேறு வழியில்லை.காளை, கரடியாக இல்லாமல், இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா எந்தப் பக்கமும் குதிக்கத் தயாராக இருக்கும் மதில்மேல் பூனையாக சந்தை இருந்தால்..? சாதகமில்லாதச் சந்தையில் 'சும்மா இருப்பதே சுகம்’ என்பதை அறிந்து, கையைக் கட்டி வேடிக்கைப் பார்ப்பதே நல்லது.
No comments:
Post a Comment