Sunday, 17 September 2017

வங்கிகளில் வட்டி குறைப்பு எதிரொலி - மியூச்சுவல் பண்ட்களில் ரூ.20,000 கோடி முதலீடு புது தில்லி,


வங்கிகளில் வட்டி குறைப்பு எதிரொலி - மியூச்சுவல் பண்ட்களில் ரூ.20,000 கோடி முதலீடு 
புது தில்லி, 


கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மியூச்சுவல் பண்ட்களில் ரூ.20,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. 


ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து, வங்கிகள் கடன் வட்டிகளை போன்றே சேமிப்பு வட்டிகளையும் குறைத்து வருகின்றன. சிறு சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு நடவடிக்கைகள், வட்டியில் வாழ்க்கையை ஓட்டுவதற்காக பெருந்தொகையை டெபாசிட் செய்தவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், சேமிப்பு கணக்குகளுக்கான வட்டியை பெரும்பாலான வங்கிகள் 3.5 சதவீதமாக குறைத்து விட்டன.

இந்நிலையில், மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு சற்று அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் மியூச்சுவல் பண்ட் முதலீடு ரூ.4,880 கோடியாக மட்டுமே இருந்தது. இது மாதம் சுமார் ரூ. 2,000 கோடி வரை அதிகரித்து வந்தது. மே மாதத்துக்கு பிறகு இந்த முதலீடு சரிவடைந்தது. இருப்பினும் ஜூலையில் சற்று உயர்ந்து ரூ.12,727 கோடி முதலீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை இல்லாத அளவாக 20,362 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த ஜனவரி முதல் மியூச்சுவல் பண்ட் நிகர முதலீடு ரூ.80,979 கோடியாக உயர்ந்துள்ளது. இத்துறையின் சொத்து மதிப்பு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சந்தை நிபுணர்கள் மற்றும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கூறியதாவது: வங்கிகளில் சேமிப்பு திட்டங்களில் வட்டி தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் கவனம் மியூச்சுவல் பண்ட் பக்கம் திரும்பியுள்ளது. 

சமீபத்தில் ஏறக்குறைய பெரும்பாலான வங்கிகள் சேமிப்பு கணக்கு வட்டியை குறைத்துவிட்டன. அதிக வட்டி பெற குறைந்தது ரூ.50,000க்கு மேல் இருப்பு வைக்க வேண்டி வரும். இவை கடந்த ஆகஸ்ட்டில் மியூச்சுவல் பண்ட் முதலீடு அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இது மியூச்சுவல் பண்ட் நிர்வகிப்போர் பங்குச்சந்தையில் கூடுதல் பணம் முதலீடு செய்ய உதவியாக அமைந்துள்ளது என்றனர்.



No comments:

Post a Comment