' ஓலோ நிறுவனத்தில் ரூ. 1,675 கோடி ஜப்பானில் 'சாப்ட் பேங்க்' முதலீடு
ஓலோ நிறுவனம்:
இந்த முதலீட்டின் மூலமாக, 'உபேர் ' நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க ஓலோ திட்டமிட்டு உள்ளது. மேலும், ' ஓலோ நிறுவனம், அதன் வணிகத்தை விரிவுபடுத்திக் கொண்டு, அதிக லாபம் ஈட்ட, புதிய முதலீடு உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த, 'உபேர் ' நிறுவனத்திற்கு, இந்தியா மிக முக்கியமான சந்தையாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க, 'ஓலோ' தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
சாப்ட் பேங்க், வலைதள சந்தை நிறுவனமான, ' ஸ்நாப்டீல் ' நிறுவனத்திலும், அதிக முதலீடு மேற்க்கொண்டுள்ளது.இந்த நிலையில், சாப்ட் பேங்க்,ஸ்நாப்டீல் நிறுவனத்தை, போட்டி நிறுவனமான ' பிளிப்கார்ட்டுக்கு, விற்ப்பனை செய்ய ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
No comments:
Post a Comment