Tuesday, 2 May 2017

எதற்கெல்லாம் ஷேர் மார்க்கெட் முக்கியத்துவம் கொடுக்கும்? எதற்கெல்லாம் விலை ஏறும்?


எதற்கெல்லாம் ஷேர் மார்க்கெட் முக்கியத்துவம் கொடுக்கும்?
எதற்கெல்லாம் விலை ஏறும்?


பங்குச்சந்தையில் குரூப் மாற்றுவது: 

தற்சமயம் சுமாரான குரூப்பில் 'லிஸ்ட்' ஆகியிருந்து, அடுத்த நல்ல குழுவுக்குப் பங்குச்சந்தையினரால் மாற்றப்பட்டால், அதாவது BSE-யில் B1-ல் இருந்து A குரூப் போவது போல, NSE-யில் Nifty Junior-ல் இருந்து Nifty-க்குப் போவது போல, அக்டோபர் 2011-ல் மும்பை பங்குச் சந்தையானது பிரிட்டானியா, கிரிசில், கீதாஞ்சலி ஜெம்ஸ், காட்ரெஜ் உட்பட 22 நிறுவனங்களை குரூப் B-லிருந்து குரூப் A-க்கு மாற்றியது.

அதேபோல மட்டும் இல்லாமல் F & O-வுக்கும் அனுமதிக்கப்படுவது.

FIIவாங்குவது:

Foreign Institutional Investors எனப்படும் அந்நிய நாட்டு நிதி நிறுவனங்கள் இந்தப் பங்கினைத் தொடர்ந்து வாங்கினால். அதேபோல இந்த நிறுவனத்தின் பங்குகளை தாங்கள் வாங்கிக் கொள்ளக்கூடிய அளவு உயர்த்தப்பட்டால்.

No comments:

Post a Comment