Friday, 12 May 2017

புரொமோட்டர்ஸ் - Promoters


புரொமோட்டர்ஸ் - Promoters


ஒரு நிறுவனத்தை முதல் போட்டு உருவாக்கியவர்களை புரொமோட்டர்ஸ் என்று சொல்வார்கள். பொதுவாக நிறுவனம் உருவாகும்போது, private limited கம்பெனியாகதான் இருக்கும். அதன்பிறகு வேறு பலர், முக்கியமாக வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள், மியூச்சுவல் ·பண்ட் நிறுவனங்கள், வங்கிகள், பெரும் பணக்கார முதலீட்டாளர்கள் ஆகியோர் பிரைவேட் ஈக்விட்டி என்ற முறையில் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வார்கள். அதன்பின் நிறுவனத்தைப் பங்குச்சந்தைக்குக் கொண்டுவரும்போது, பொதுமக்களும் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவார்கள். அப்பொழுதும், நிறுவனத்தை முதலில் தொடங்கியவர்கள் புரொமோட்டர்ஸ் என்றே அழைக்கப்படுவார்கள்.


No comments:

Post a Comment