கன்வர்டிபிள் டிபென்ச்சர்ஸ் - Covertible Debentures
டிபென்ச்சர்கள் தெரியும். கடன் பத்திரங்களை டிபென்ச்சர்களாக வெளியிட்டு, பின்னால் அதையே பங்குகளாக மாற்றும் ஏற்பாடுதான் கன்வெர்டிபிள் டிபென்ச்சர்ஸ். ஷேர்களாக மாற்றத்தக்கக் கடன் பத்திரங்கள். இவற்றில் கட்டாயமும் (Compulsory) உண்டு, 'விருப்பப்பட்டால்' என்பதும் (Optional) உண்டு. டிபென்ச்சர்கள் எந்த ஆண்டு பங்காக மாறும் என்பதும் நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடலாம்.
இந்த டிபென்ச்சர்களைப் பங்குகளாக மாற்றும்போது, முகப்பு விலையிலேயும் மாற்றப்படலாம், அல்லது பிரிமியம் விலையிலும் மாற்றப்படலாம்.
இந்தப் பிரிமியம் தொகையை முன்கூட்டியேயும் தீர்மானிக்கலாம், அல்லது மாற்றப்படும் பங்குகளில் குறைந்தபட்ச, அதிகபட்ச விலைகளை முன்கூட்டியே தீர்மானம் செய்து, பங்குகளாக மாற்றும் சமயத்தில் இந்த குறைந்த, அதிக விலைகளுக்கிடையே ஒரு விலையைத் தேர்ந்தெடுப்பதும் பங்குகளாக மாற்றலாம்.
நன்றி சோம. வள்ளியப்பன்
No comments:
Post a Comment