ரைட்ஸ் - Rights
ஒரு நிறுவனத்தில் பங்குதாரர்கள் என்பவர்கள் யார்? அவர்களும் முதல் போட்டிருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு அந்த நிறுவனத்தில உரிமை உள்ளது. நல்லது வந்தால், அவர்களுக்கு முதல் மரியாதை கொடுக்க வேண்டும்.
நிறுவனம் நன்றாக நடக்கிறது, விருத்தி செய்ய வேண்டும் அல்லது வேறு காரணங்களுக்காகக் கூடுதல் முதல் தேவைப்படுகிறது. என்ன செய்யலாம்? பங்குகள் வெளியிடலாம். யாருக்குக் கொடுப்பது? பொதுமக்களுக்கு 'பப்ளிக் இஷ்யூ' மூலம்.
அது மட்டும்தான் வழியா? யார் சொன்னது? ஏற்கெனவே பங்குதாரர்களாக இருப்பவர்கள் இருக்கிறார்களே? அவர்களுக்குக் கொடுக்கலாமா? ஆமாம் கொடுக்கலாமே. அதற்குப் பெயர்தான் ரைட்ஸ்.(உரிமை). ரைட்ஸ் ஷேர்ஸ் என்றால் உரிமைப் பங்குகள்.
No comments:
Post a Comment